சென்னை, ஆக.19 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே , அதே மாவட்டத்தில் ஏழைகளைக் குறிவைத்து கல்லீரல் திருட்டும் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி மனித உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்து சட்டவிரோத செயல்களையும் திமுக அரசு ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்க அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரத்தைச் சேர்ந்த 37 வயது பெண்மணி ஒருவர் கந்து வட்டிக்கு வாங்கியக் கடனை அடைக்க முடியாமல் தடுமாறி வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவரை அணுகிய தரகர்கள் அவரது சிறுநீரகத்திற்கு ரூ.8 லட்சம் விலை பேசியுள்ளனர். அவரை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்த போது அவரது சிறுநீரகத்த்தை மாற்ற முடியாது என்று தெரியவந்துள்ளது. அதனால், அவருக்கு மருத்துவ ஆய்வு செய்ய ஆன செலவுகளை தரும்படி அந்த பெண்ணை மிரட்டிய தரகர்கள், ஒரு கட்டத்தில் அவரது கல்லீரலை எடுத்துக் கொண்டு அதற்காக ரூ.4.5 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இரத்த உறவு இல்லாதவர்களுக்கு உடல் உறுப்புகளைக் கொடையாக வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து விதிகளையும் மீறி நாமக்கல் மாவட்டத்தில் வறுமையில் வாடும் மக்களை மூளைச்சலவை செய்து அவர்களின் சிறுநீரகங்களை திருடியுள்ளனர். சிறுநீரகத்தை எடுக்க முடியாத நிலையில் கல்லீரலைத் திருடியுள்ளனர். அப்படியானால், தமிழ்நாட்டில் உடல் உறுப்பு வணிகம் எந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “தமிழ்நாட்டில் போதை மருந்துக் கடத்தல் முதல் உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்தையும் செய்பவர்கள் திமுகவுடன் சம்பந்தப்பட்டவர்கள் தான். இத்தகைய சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய திராவிட மாடல் அரசு அத்தகைய குற்றங்களுக்கு துணை போகிறது. தமிழ்நாட்டில் ஏழை மக்களின் உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனை ஆகும். இதற்கெல்லாம் சேர்த்து வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
TCS: 2026ஆம் ஆண்டிலும் டி.சி.எஸ் நிறுவனத்தில் பணி நீக்கம் தொடரும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன….
DMK MP Dayanidhi Maran: வட இந்தியாவில் பெண்கள் வீட்டு வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என தயாநிதி மாறன் பேசியுள்ளார்….
New delhi: ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா அலுவலகங்களை சீன கம்யூனிஸ்ட் குழுவினர் பார்வையிட்டனர். இதனை காங்கிரஸ் விமர்சித்துள்ளது….
The Raja Saab Box office : பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் 4ஆம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன….
Mutual funds: பி.பி.எஃப் மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு குறித்து பார்க்கலாம். இதில், பி.பி.எஃப் பாதுகாப்பானது, அரசு உறுதி அளிக்கும் திட்டம், ஆனால் வருமானம் குறைவாக இருக்கும். எனினும்,…
Disha Patani: நடிகர் சூர்யா பட நடிகை, பஞ்சாப் பாடகர் ஒருவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார் என்ற கிசுகிசு வெளியாகியுள்ளது….