முக்திக்கு வழி சொல்லும் சபரிமலை ; 18 படிகள் உணர்ந்தும் தத்துவம் என்ன?

Mythology | சபரிமலையில் உள்ள 18 படிகளின் தத்துவம் தெரியுமா ?

Published on: November 21, 2024 at 11:27 am

Mythology | ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப சன்னதிக்கு செல்கின்றனர். சபரிமலையில் உள்ள 18 படிகளில் ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தத்துவத்தை கொண்டுள்ளது. ஒவ்வொரு படியும் நமது கர்ம வினைகளை கலைந்து பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவனின் திருவடியை சேர்த்து முக்தி நிலை பெறுவதற்கு வழி வகுக்கிறது.

முதல் படி – பிறப்பும் நிலையற்றது : நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பாவம் மற்றும் புண்ணிய பலன்கள் உண்டு என்பதை உணர்ந்து இறைவனின் திருவடியை பற்றி இறைவனின் அருளால் நெற்றியடைய வேண்டும் என்ற ஆத்ம உணர்வினை அளிக்கிறது. இது விஷாத யோகம் ஆகும்.

இரண்டாம் படி : சாங்கிய யோகம்: பரமாத்மாவை குருவாக உணர்ந்து குருவிடம் உபதேசம் பெறுதல்.

மூன்றாம் படி : கர்மயோகம் : குருவின் உபதேசத்திற்கு பின்னர் மனம் பக்குவம் அடைய வேண்டும். பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் தன்மையை உணர்த்துகிறது.

நான்காம் படி: உலக பற்றினை விடுத்து பரம்பொருளை பற்றி அடையும் பாதையை காட்டுகிறது.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம் : நான் என்ற எண்ணத்தை விடுத்து. அனைத்தையும் துறந்து இறை சிந்தனை ஒன்றே இலக்காக கருதி செயல்படம் வலியை காட்டுகிறது.

.ஆறாவது படி : தியான யோகம் : கண், காது மூக்கு, வாய், மெய் ஆகியவற்ற அடக்கி இறை சிந்தனை மற்றும் இறை செயலுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை காட்டுகிறது.

ஏழாம் படி : ஞான விஞ்ஞான யோகம்: எல்லாம் பிரம்மமே என்ற உண்மையை உணர்த்துகிறது.

எட்டாம் படி : அச்சர பிரம்மயோகம் : நினைவினை ஓட விடாமல் எப்பொழுதும் இறை சிந்தனையில் இருத்தல்.

ஒன்பதாம் படி: ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்: ஆன்மிகத்தை உணர செய்து மெய் அறிந்து எல்லோரையும் அன்பு செய்தல்.

பத்தாம் படி : விபூதி யோகம்: திறமை, புகழ், அழகு, அறிவு அனைத்தையும் இறைவனாகவே உணர்வது.

பதினொன்றாம் படி : விஸ்வரூப தரிசன யோகம்: உலகில் ஆண்டவனையும் ஆண்டவனில் உலகத்தையும் பார்க்கும் மனதை பெறுவது.

பன்னிரண்டாம் படி : பக்தி யோகம்: இகழ்ச்சி, புகழ்ச்சி, இன்பம், துன்பம், விருப்பு வெறுப்பு, ஏழை பணக்காரன் போன்ற வேறுபாடுகளை அகற்றி, சமத்துவத்தைக் காண வைக்கிறது.

பதிமூன்றாம் படி: க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்: அனைத்து உயிர்களிலும் இறைவனே குடிகொண்டு அவ்வுயிர்களை இயக்குகிறார் என்ற உண்மை நிலையினை உணர வைக்கிறது.

பதினான்காம் படி : குணத்ரய விபாக யோகம்: பசி, பிணி மூப்பு, சாக்காடு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களைக் களைந்து இறையளுக்குப் பாத்திரமாவதை காட்டுகிறது.

பதினைந்தாம் படி : புருஷோத்தம யோகம்: நமக்குள் இறைவன் இருக்கிறான் என்பதை அரிய வழிகாட்டுகிறது.

பதினாறாம் படி : தைவாசுரஸம்பத் விபாக யோகம்: அனைவரும் இறைவனின் படைப்புகளே என்ற உண்மை நிலையினை உணர்த்தி யாரிடமும் அகங்காரம் இல்லாமல் அன்பு செலுத்த வைக்கிறது.

பதினேழாம் படி : ச்ரத்தாத்ரய விபாக யோகம் : சர்வமும் பிரம்ம மயம் என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு பரபிரம்ம ஞானம் பெறுவதற்கு வழிகாட்டுகிறது.

பதினெட்டாம் படி : மோட்ச சன்னியாச யோகம்: பதினெட்டு படிகளையும் பரம்பொருள் ஆகிய குருவின் வழிகாட்டுதலின்படி படிப்படியாய் அடியெடுத்துக் கடந்து வந்தால் நம் கண் எதிரே மணிகண்டப் பிரபு பேரொளியாய் தரிசனம் தந்து, நமது வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயப்பனின் பதினெட்டு படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

இதையும் படிங்க : கடும் தவம்; பன்றி உடன் சண்டை: அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் கிடைத்தது எப்படி?

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?
Dharasuram Sri Airavatesvara Temple

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com