இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மனைவி விவாகரத்து அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மனைவி விவாகரத்து அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: November 19, 2024 at 11:04 pm
Updated on: November 19, 2024 at 11:05 pm
AR Rahman divorce | ஏ.ஆர். ரஹ்மான் மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவித்துள்ளார். அதில், 29 ஆண்டுகால மண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை பிரிந்ததாக அறிவித்துள்ளார். இன்று (நவ.19, 2024, செவ்வாய்க்கிழமை) இரவு, அவர் பத்திரிகையாளர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “ஏ.ஆர். ரஹ்மான் உடனான திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதை உறுதிப்படுத்தினார். இந்த ஜோடி திருமணமாகி 29 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா டுடேக்கு அளித்துள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, திருமதி சாய்ரா தனது கணவர் திரு. ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.
இந்த முடிவு அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்திற்குப் பிறகு வருகிறது. ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், இந்த பிரிவு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் 1995 இல் சைரா பானுவை மணந்தார். இருவரும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கு: நடிகை கஸ்தூரிக்கு 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com