நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு, 45 கிலோ சந்தனக் கட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு, 45 கிலோ சந்தனக் கட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
Published on: November 19, 2024 at 10:40 pm
Nagore Sandalwood Festival | நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு, 45 கிலோ சந்தனக் கட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள 45 கிலோ சந்தனக் கட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, எஸ்.எம். நாசர், வனத்துறை முதன்மை செயலர் செந்தில் குமார், சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலர் விஜய ராஜ் குமார், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, மாநில நல ஆணையத்தின் உறுப்பினர் நாகூர் ஏ.ஹெச். நஜிமுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்; தமிழக அரசு அனுமதிக்க கூடாது: அன்புமணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com