Justice D Krishnakumar | மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், அந்த பதவிக்கு டி கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி கிருஷ்ணகுமார், ஏப்ரல் 7, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் மே 21, 2025 அன்று ஓய்வு பெற உள்ளார்.
நீதிபதி டி. கிருஷ்ணகுமாரின் பெயரைப் பரிந்துரைக்கும் அதே வேளையில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில், தற்போது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மட்டுமே இருக்கிறார் என்பதையும் கொலிஜியம் எடுத்துரைத்துள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே வெடித்த கலவரத்தில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் பாதுகாப்பு முகாம்களில் உள்ளனர். சமீப நாட்களாக மீண்டும் வன்முறை அதிகரித்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் கம்பெனி படைகள் செல்லும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க டெல்லியில் கடும் மாசு; மறு அறிவிப்பு வரும் வரை.. தொடக்க பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு!
Maharashtra: மராத்தியில் பேசு எனக் கூறி ரெஸ்டாரெண்ட் உரிமையாளரை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Andhra Pradesh: காருக்குள் ஏசி போட்டு தூங்கிய அண்ணன் தம்பி இருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்….
Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்