மக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் ; டிடிவி தினகரன்

அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடம் ஒதுக்கிட கோரி போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை ஒடுக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Published on: November 18, 2024 at 6:30 pm

TTV Dhinakaran | மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்த பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை வழங்கக் கோரி சின்ன உடைப்பு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுடன் கூடிய விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று ஏற்பாடுகளைக் கூட செய்து தர மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சின்ன உடைப்பு கிராம மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவலர்களை குவித்து அச்சுறுத்துவதோடு, அவர்களின் குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதியை நிறுத்துவதும், மின்சார இணைப்பை துண்டிப்பதும் திமுக அரசின் அடக்குமுறையையும், ஆணவப்போக்கையும் வெளிப்படுத்துகிறது.

எனவே, தங்களின் வாழ்வாதார தேவைகளுக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு கிராம மக்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்புவது குறித்து அமைச்சருக்குத் தெரியாதா? அன்புமணி ராமதாஸ்

வெற்றிப் பயணத் திட்டம்.. பெண்கள் எவ்வளவு தூரம் கட்டணம் இன்றி பயணிக்கலாம்? Vetri Payanam Scheme

வெற்றிப் பயணத் திட்டம்.. பெண்கள் எவ்வளவு தூரம் கட்டணம் இன்றி பயணிக்கலாம்?

Vetri Payanam Scheme : முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்துள்ள வெற்றிப் பயணத் திட்டத்தில் மகளிர் எவ்வளவு தூரம் கட்டமின்றி பயணிக்கலாம் தெரியுமா?…

தமிழ்நாட்டில் 44 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கைவரிசை.. எஸ்.சி/எஸ்.டி மக்கள் குறி.. சி.ஜே.பி குற்றச்சாட்டு CJP Alleges SIR

தமிழ்நாட்டில் 44 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கைவரிசை.. எஸ்.சி/எஸ்.டி மக்கள் குறி.. சி.ஜே.பி குற்றச்சாட்டு

CJP Alleges SIR : தமிழ்நாட்டில் 44 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கைவரிசை காட்டியுள்ளதாக சி.ஜே.பி குற்றஞ்சாட்டியுள்ளது….

பெண்கள், திருநங்கைகள் இலவச பயணம்.. வெற்றிப் பயணத் திட்டம் தொடக்கம்! Vetri Payanam Scheme

பெண்கள், திருநங்கைகள் இலவச பயணம்.. வெற்றிப் பயணத் திட்டம் தொடக்கம்!

Vetri Payanam Scheme: தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் “வெற்றிப் பயணம்” திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அக்டோபர் 2ஆம் தேதி…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com