மும்பை ஆர்பிஐ வாடிக்கையாளர் சேவைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தததை தொடர்ந்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மும்பை ஆர்பிஐ வாடிக்கையாளர் சேவைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தததை தொடர்ந்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Published on: November 17, 2024 at 12:55 pm
Bomb Threat in RBI | மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வாடிக்கையாளர் சேவைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மத்திய வங்கியை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக மர்மநபர் ஒருவர் மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து, மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து, காலர் ஐடியை கண்காணிக்கவும், மர்ம நபரை அடையாளம் காணவும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர் என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான செய்தியில், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை மதியம் அடையாளம் தெரியாத மர்ம நபரிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
மும்பையிலிருந்து அஜர்பைஜான் செல்லும் விமானத்தில் வெடிமருந்துகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் ஒரு நபரின் பெயரை மர்ம நபர் குறிப்பிட்டு, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
சமீபத்தில் வந்த 400 க்கும் மேற்பட்ட அழைப்புகளில் இதுவும் ஒன்றாகும். இது விமானப் பயணத்தை சீர்குலைத்ததோடு சோதனையை தீவிரப்படுத்த செய்தது.
மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பல பள்ளிகள், திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கும் கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவ்வாறு வரும் அச்சுறுத்தல்கள் புரளிகளாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க பால்கனியில் கஞ்சா வளர்த்த காதல் ஜோடி; பேஸ்புக் வீடியோவால் வீடு தேடி வந்த போலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com