தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 யில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் என் வாழ்வில் நான் பல தோல்விகளை சந்தித்துள்ளேன் என தெரிவித்தார்.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 யில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் என் வாழ்வில் நான் பல தோல்விகளை சந்தித்துள்ளேன் என தெரிவித்தார்.
Published on: November 16, 2024 at 9:55 am
Sanju Samson Speach after Century | இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இந்த ஜோடி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 73 ரன்கள் அடித்த நிலையில் அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் திலக் வர்மா களமிறங்கினார்.
சாம்சனுடன் ஜோடி சேர்ந்து திலக் வர்மாவும் அதிரடியாக விளையாடினார். வெறும் 8.3 ஓவர்களிலேயே இந்தியா 100 ரன்களை கடந்தது. சாம்சன் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். 1 விக்கெட்டை மட்டுமே இழந்த இந்தியா 283 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 109 ரன்களும், திலக் வர்மா 120 ரன்களும் குவித்தனர்.
284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொட்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக மில்லர் 36 ரன்களும், ஸ்டப்ஸ் 43 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் 18.2 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-1 என்ற செட் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இந்தியா.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், தனது வாழ்க்கையில் நிறைய தோல்விகளை சந்தித்ததாகவும், புரோட்டீஸுக்கு எதிரான சதம் தனக்கு அரத்தமுள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க சொந்த மண்ணில் கோட்டை விட்ட ஆஸி; 22 ஆண்டுக்குப் பின் சாதித்த பாகிஸ்தான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com