Aus Vs Pak ODI Series | ஆஸ்திரேலியா மண்ணில் பாகிஸ்தான் அணி 22 ஆண்டுகளுக்குப் பின்பு ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
Aus Vs Pak ODI Series | ஆஸ்திரேலியா மண்ணில் பாகிஸ்தான் அணி 22 ஆண்டுகளுக்குப் பின்பு ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
Published on: November 11, 2024 at 5:37 pm
Updated on: November 11, 2024 at 6:05 pm
Aus Vs Pak ODI Series | பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என முன்னிலை வகித்தன. இதனால் மூன்றாவது போட்டி மிகவும் விறுவிறுப்பாக மாறியது. பெர்த்-தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எவ்வித சவாலும் அளிக்காமல் சட்டென விழுந்தது ஆஸ்திரேலியா.
ஆம்.. டாஸ் என்று பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் கண்ட ஆஸ்திரேலியாவிற்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்து இருந்தது. இந்த நிலையில் 26.5 ஓவரில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. பாகிஸ்தான் தரப்பில் சாகின் ஷா, நசீம் ஷா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
இந்த நிலையில் 144 ரன்கள் எடுத்தால் கோப்பை என்ற கனவுடன் இறங்கிய பாகிஸ்தான் அணியின் வீரர்கள் அதிரடி காட்டினார்கள். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சபீக் மற்றும் அயூப் முறையை 42,37 ரங்கள் எடுத்தனர். அடுத்து கேப்டன் ரிஸ்வான் மற்றும் அனுபவ ஆட்டக்காரர் பாபர் ஆகியோர் இணைந்து பாகிஸ்தானை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இவர்கள் இருவரும் கடைசி வரை அவுட் ஆகாமல் 30,28 ரன்கள் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் பாகிஸ்தான் அணி 22 ஆண்டுகளுக்குப் பின்பு ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு வாட்டர் யூனிஸ் தலைமையிலான பாகிஸ்தான அணி, 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது நினைவு கூறத்தக்கது.
இதையும் படிங்க : IPL மெகா ஏலம் 2025; இந்த வீரரின் விலை ரூ.20 கோடியா? யாரு சாமி இவன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com