நடிகர் விஜய்யின் கேரியரில் முக்கியமாக அமைந்த படம் துப்பாக்கி.
நடிகர் விஜய்யின் கேரியரில் முக்கியமாக அமைந்த படம் துப்பாக்கி.
Published on: November 15, 2024 at 12:50 pm
A.R. Murugadoss | நடிகர் விஜய்யின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஓர் படம் துப்பாக்கி. ரூபாய் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ₹.120 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் சிற்பம் போல் செதுக்கி இருப்பார் ஏ ஆர் முருகதாஸ்.
படத்தில் உள்ள பாடல் காட்சிகளும்; சண்டைக் காட்சிகளும் நடிகர் விஜய்க்கு தத்ரூபமாக பொருந்தி இருக்கும். படத்தில் விஜய் மிலிட்டரி காரனாக நடித்திருப்பார். ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லை என்றாலும்; நாட்டை தாக்க இருந்த ஒரு சதியை தனி ஒரு ராணுவ வீரனாக விஜய் எவ்வாறு முறியடித்தார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த நிலையில், இயக்குனர் ஏ .ஆர். முருகதாஸ் சமீபத்தில் வலையொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த திரைப்படத்தை தான் நடிகர் அக்ஷய் குமார் எழுதி இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த கதையை நடிகர் அக்ஷய்குமார் இடம் சொல்லி ஓகே வாங்கி விட்டார். எனினும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அக்ஷய் குமார் குறிப்பிட்ட நாளைக்குள் படத்துக்குள் வர முடியவில்லை. மறுபுறம் மணிரத்தினம் படத்தில் நடிக்க இருந்த நடிகர் விஜய், சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார்.
அப்போதுதான் நடிகர் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர், ஏ. ஆர். முருகதாஸுக்கு ஃபோன் செய்து நடிகர் விஜய்யிடம் கதை சொல்லுமாறு கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸும் துப்பாக்கி கதையை நடிகர் விஜய் இடம் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் அக்ஷய்குமார் இடமும் நான் இந்த கதையை தமிழில் முதலில் எடுத்துக் கொள்கிறேன் என ஒப்புதல் வாங்கி உள்ளார் ஏ ஆர் முருகதாஸ். ஏ ஆர் முருகதாஸின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க 13 ஆண்டுகளுக்குப் பின் கர்ப்பம்; கணவருடன் கொண்டாடிய நடிகை: இவங்க யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com