ஆர்ஆர்பி டெக்னீசியன் பணிக்கான விண்ணப்ப படிவத்தை எப்படி செக் பண்ணுவது என்பது குறித்து பார்க்கலாம்.
ஆர்ஆர்பி டெக்னீசியன் பணிக்கான விண்ணப்ப படிவத்தை எப்படி செக் பண்ணுவது என்பது குறித்து பார்க்கலாம்.
Published on: November 15, 2024 at 1:36 pm
RRB Technician 2024 | இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs) டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்) ஆட்சேர்ப்புத் தேர்வு 2024க்கான விண்ணப்ப நிலையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்கள், தங்கள் படிவங்கள் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நிபந்தனைகளுடன் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதாக என்பதை இப்போது சரிபார்க்கலாம்.
இதனை ஆர். ஆர். பி. யின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrbapply.gov.in பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், ஆட்சேர்ப்பு வாரியம் அதற்கான காரணங்களைப் பகிர்ந்து கொள்ளும். “ஏற்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் (தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட / நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டவை) முற்றிலும் தற்காலிகமானவை.
ஆட்சேர்ப்பு செயல்முறையில் உள்ள எந்த கட்டத்திலும் அல்லது அதற்குப் பிறகும், ஏதேனும் முரண்பாடு/குறைபாடு/தவறான பதிவு அல்லது அவர்களால் வழங்கப்பட்ட தரவில் பிழை போன்றவற்றின் போது அவரது வேட்புமனு ரத்துசெய்யப்படும்.
ஆட்சேர்ப்பு செயல்முறையின் எந்தக் கட்டத்திலும் ஆன்லைன் விண்ணப்பத்தில் அல்லது விண்ணப்பதாரர்களின் ஏதேனும் முறைகேடு இருப்பின் ஆர்.ஆர்.பி. ன் கவனத்திற்கு வருகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆர்.ஆர்.பி டெக்னீசியன் (CEN 02/2024) ஆட்சேர்ப்புத் தேர்வு டிசம்பர் 18-20, 23-24, 26, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், 14,298 டெக்னீஷியன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
உங்கள் தேர்வு நகரத் தகவல் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுத் தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன் அட்மிட் கார்டு வழங்கப்படும். மறுபுறம், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நகர தகவல் சீட்டு மற்றும் பயண அதிகாரம் சோதனைக்கு 10 நாட்களுக்கு முன்னதாக நேரலை செய்யப்படும்.
ஆர்.ஆர்.பி. டெக்னீஷியன் 2024 விண்ணப்ப நிலையை சரிபார்ப்பது எப்படி?
ஆர்.ஆர்.பி. டெக்னீஷியன் ஆட்சேர்ப்பு தேர்வு தொடர்பான எந்த உதவிக்கும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர்ஆர்.பி. ஹெல்ப் டெஸ்க் எண்களை தொடர்பு கொள்ளலாம். அவர்கள் rrb.help@csc.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க பி.எம். வித்யாலட்சுமி கல்வித் திட்டம்; யார் யாருக்கு கிடைக்கும்? கல்விக் கடன் தொகை எவ்வளவு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com