How to make murungai keerai kadaiyal | சுவையான முருங்கைக்கீரை கடையல் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
How to make murungai keerai kadaiyal | சுவையான முருங்கைக்கீரை கடையல் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Published on: November 13, 2024 at 7:17 am
Updated on: November 13, 2024 at 7:18 am
How to make murungai keerai kadaiyal | குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான ஹெல்தியான முருங்கைக்கீரை கடையல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
முருங்கைக்கீரை -1 கட்டு
எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய் -3
சின்ன வெங்காயம் -15
பூண்டு -7 பல்லு
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
வேக வைக்க வேண்டியவை
துவரம் பருப்பு -1/2 கப்
பூண்டு -2 பல்லு
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
தண்ணீர் -1½கப்
செய்முறை
ஒரு குக்கரில் துவரம் பருப்பை இரண்டு மூன்று முறை நீரில் நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பூண்டு மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் 1½ கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு, சீரகம், வரமிளகாய், சிறு துண்டுகளாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் வெங்காயம் சீக்கிரம் வதங்க சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் பூண்டினை இடித்தும் பயன்படுத்தலாம். பின்னர் இதனுடன் இரண்டு முறை நீரில் அலசி சுத்தம் செய்து வைத்த முருங்கைக் கீரையை தண்ணீரை வடித்து சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். கீரை நல்ல வாசனையோடு நிறம் மாறி வெந்து வரும். கீரை நன்கு வெந்த பின்னர் இதனுடன் ஏற்கனவே வேகவைத்து எடுத்த பருப்பினை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
இந்த தருணத்தில் உப்பை சரிபார்த்துக் கொள்ளவும். அடுப்பை ஆஃப் செய்து கீரை ஆரிய பின்னர் மத்தை பயன்படுத்தி நன்கு கடைய வேண்டும் அல்லது மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தும் பரிமாறலாம். இப்போது சுவையான ஆரோக்கியமான முருங்கைக்கீரை கடையல் தயார்.
இதையும் படிங்க : ஹெல்தியான கோவை ஸ்பெஷல் பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com