Actor Suriya | ” மும்பையில் குடியேறியது ஏன் என்பது குறித்து நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
Actor Suriya | ” மும்பையில் குடியேறியது ஏன் என்பது குறித்து நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
Published on: October 29, 2024 at 6:54 pm
Updated on: October 29, 2024 at 7:01 pm
Actor Suriya | நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா, நடிகராக அறிமுகமாகி சின்னச் சிறிய படங்களில் நடித்து வந்தார். இவருக்கு ஆரம்ப காலத்தில் இயக்குனர் ஹரியின் படங்கள் பெரிய அளவில் கை கொடுத்தனர்.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் கேரியரில் உச்சம் தொட்ட படமாக ஜெய் பீம் அமைந்தது. இந்தப் படத்தின் மூலம் சூர்யாவுக்கு மிகப்பெரிய தொகை கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா சென்னையில் இருந்து மும்பைக்கு குடிப்பெயர்ந்தார். முதலில் தனது மகன் மகள்களின் படிப்புக்காக மும்பைக்கு குடி பெயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது நடிகர் சூர்யா இது குறித்து புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஜோதிகா அவருடைய 18 – 19 வயதில் சென்னைக்கு வந்தார். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் என்னுடன், எனது குடும்பத்தினருடன் இருந்தார். இதனால், தனது தொழில், நண்பர்கள் போன்ற அனைத்தையும் விட்டுவிட்டார்.
ஜோதிகாவின் இந்த தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாகவே மும்பை சென்றேன். கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, அவர் ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க வேண்டியதாயிற்று. இதனால், ஜோதிகாவின் கெரியர் சிறிது தேக்கமடைந்தது. இதுதான் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தையும் தொடங்க காரணமாக அமைந்தது.
Q: Why you have moved to Mumbai❓#Suriya: Jyothika was in Mumbai for 18Years & she shifted to Chennai for me about 27 years. She sacrificed everything & came for me. Whatever a man needs a woman also needs that so again shifted to Mumbai for her & Kids❤️pic.twitter.com/jc1VeYMkT8
— AmuthaBharathi (@CinemaWithAB) October 29, 2024
ஜோதிகா மும்பையில் தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்து இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான், நான் என்பதில் இருந்து நமது என்ற மனநிலையை மாற்றுவது முக்கியம். ஒரு நடிகராக அவரது வளர்ச்சியைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு மேலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க அமரன் படம் எப்படி இருக்கு? ஹைதராபாத்தில் ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com