குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500.. திருமணத்தின் போது ஒரு பவுன் தங்கம்.. விஜய் அறிவிப்பு!

TVK Vijay: குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 வழங்கப்படும் என அறிவித்துள்ள நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவர் ஆன விஜய், திருமணத்தின் போது பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published on: March 7, 2026 at 8:34 pm

சென்னை மார்ச் 7 2026; தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 வழங்கப்படும் என நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது; இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான சில,

  • பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கென தனி இலாகா உருவாக்கப்படும். அந்த இலாகா எனது நேரடிக் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் இருக்கும்.
  • 2-60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும். இதில் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களாக இருப்பவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்
  • பெண்களின் திருமணத்திற்காக எட்டு கிராம் (ஒரு பவுன்) தங்கமும், தரமான பட்டுச் சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும்.
  • 1 முதல் 12-ம் வகுப்பு வரை குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமல் இருக்க, ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் 15,000 ரூபாய் பொருளாதார உதவித் தொகையாக வழங்கப்படும்.
  • அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கும் வகையில் உத்தரவிடப்படும். தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்துப் பெண்களும் கட்டணமின்றிப் பயணிக்கலாம்.
  • பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘ராணி வேலுநாச்சியார் படை’ ஏற்படுத்தப்படும். சாதாரண உடையில் இருக்கிற இந்தப் படையைச் சேர்ந்த பெண்கள் ‘பாடி கேம்’ (Body Cam) உடன் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.
  • பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க ‘அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள்’ அமைக்கப்படும்.
  • தனியார் ஷேர் ஆட்டோக்கள் உட்பட அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் அவசர காலப் பொத்தான்கள் பொருத்தப்படும்.
  • சிசிடிவி கேமராக்களும், விளக்குகளும், வெளிச்சமும் இல்லாத இடங்களே இல்லை என்ற வகையில் ‘ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ்’ (Zero Dark Spots) உருவாக்கப்படும்.
  • ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்துப் பெண்களுக்கும் விலையில்லா சானிட்டரி பேட்ஸ் வழங்குவது உறுதி செய்யப்படும்.
  • பெண்கள் நடத்தும் சுய உதவிக்குழுக்களுக்கு ஐந்து லட்சம் வரை வட்டியில்லா நிதி வழங்கப்படும். சுய உதவிக்குழுக்களிலிருந்து பதிவு செய்யப்பட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக (MSMEs) மாறுபவர்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் வழங்கப்படும்; அது 100% மானியமாகவே வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே Baby Welcome Kit வழங்கப்படும்.

இதையும் படிங்க; கோவை மாணவி பாலியல் வன்கொடுமை.. மூவருக்கு வாழ்நாள் சிறை!

என் தந்தையைப் போல் தாயையும் வெற்றிப் பெற செய்யுங்கள்.. விருத்தாசலத்தில் சண்முகப் பாண்டியன் பரப்புரை! Assembly Election 2026

என் தந்தையைப் போல் தாயையும் வெற்றிப் பெற செய்யுங்கள்.. விருத்தாசலத்தில் சண்முகப் பாண்டியன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com