Actress sai pallavi | அமரன் படம் குறித்து நடிகை சாய் பல்லவி தெரிவித்த கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
Actress sai pallavi | அமரன் படம் குறித்து நடிகை சாய் பல்லவி தெரிவித்த கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
Published on: October 28, 2024 at 5:50 pm
Actress sai pallavi | சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் அமரன். இந்திய ராணுவத்தின் ராஜ்கோட் படையைச் சேர்ந்த மேஜர் முகம் வரதராஜனின் உண்மை கதையைத் தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ள இந்த படத்தை, கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஜம்மு காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. மேஜர் முகம் வரதராஜனின் வீர தீர செயல்களுக்கு கௌரவம் அளிக்கும் விதமாக அவருக்கு அசோக் சக்கரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் ப்ரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் நடந்த ப்ரொமோஷன் விழாவில் பேசிய நடிகை சாய் பல்லவி, ” இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மாபெரும் திருப்பமாக அமையும்” என்றார். மேலும் சாய் பல்லவி, ” நடிகர் சூர்யாவுக்கு காக்க காக்க படம் எப்படி ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ, சிவகார்த்திகேயனுக்கு அமரன் படமும் அப்படி ஒரு திருப்புமுனையாக அமையும்” என்றார்.
இதையும் படிங்க : விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com