Mythology | வாமன அவதாரத்தில் வந்த விஷ்ணு மகாபலி இடம் என்ன கேட்டார் தெரியுமா?
ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?
Mythology: ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?…
Mythology | வாமன அவதாரத்தில் வந்த விஷ்ணு மகாபலி இடம் என்ன கேட்டார் தெரியுமா?
Published on: October 21, 2024 at 12:44 pm
Mythology | காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் தனது இடது காலை விண்ணை நோக்கி தூக்கியும் வலது காலை பூமியில் வைத்தவாரும் காட்சியளிக்கிறார். இந்த காட்சிக்கு பின்னே ஒரு வரலாறு உள்ளது அது என்னவென்றால், மகாவிஷ்ணுவுக்கு 10 அவதாரங்கள் உள்ளது என்று புராணங்கள் கூறுகின்றன. அசுர மன்னன் மகாபலி சக்கரவர்த்தி என்பவன் மூன்று உலகங்களையும் ஆள்வதற்கு யாகம் ஒன்றே நடத்தினான்.
இதனால் தேவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர். எனவே தேவர்கள் திருமாலிடம் இதைப் பற்றி முறையிட்டனர். இதற்கு தீர்வு காண திருமால் நினைத்தார். மகாபலி நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானங்களை வாரி வழங்கி வந்தான். மகாபலி நடத்திய யாகத்திற்கு வந்த வாமனன் குள்ள உருவத்தில் வந்து மூன்றடி நிலத்தினை தானமாக கேட்டார்.
வாமன அவதாரத்தில் விஷ்ணு தான் வந்திருக்கிறார் என்பதை ஞான திருஷ்டியில் அறிந்த சுக்கிராச்சாரியார் அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே என்று மகாபலியை எச்சரித்தார். ஆனால் மகாபலி சுக்கிராச்சாரியாரின் பேச்சை கேட்காமல் மூன்றடி தானம் தர சம்மதித்தான்.
உடனே திருமால் பிரம்மாண்டமான உருவம் எடுத்து முதல் அடியில் கீழ் உலகத்தையும் இரண்டாவது அடியில் மேல் உலகத்தையும் அளந்தார் மூன்றாவது அடி அளக்க இடமில்லை என்று பெருமாள் மகாபலியை பார்த்து கேட்க எனது தலை இருக்கிறது என்றார் மகாபலி. இதன் மூலம் மூன்று உலகத்தையும் மீட்டு திருமால் தேவர்களிடம் ஒப்படைத்தார்.
இதையும் படிங்க : ‘தங்கமாய் மாறிய உளுந்து’: திருச்செந்தூர் சிவன் கோவில் வரலாறு தெரியுமா?
Mythology: ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?…
Mythology: 12ஆம் நூற்றாண்டில் சிற்பிகளால் உண்டாக்கப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் பற்றி தெரியுமா?…
Mythology: படகுகளை திசை மாற்றிய அம்மனின் மூக்குத்தி ரகசியம் தெரியுமா?…
5 Ram Temples in Tamil Nadu: சோழர்கள் வாழ்ந்த பூமியான திருவாரூரில் பஞ்சராமர் தலங்கள் அமைந்துள்ளன. இந்த பஞ்சராமர் தலங்கள் தெரியுமா?…
Mythology: 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் பற்றி தெரியுமா?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com