Russia Ukraine war | ரஷ்யாவும், உக்ரைனும் தங்களுக்கிடையே போர்க் கைதிகளை பரிமாற்றிக் கொண்டன.
Russia Ukraine war | ரஷ்யாவும், உக்ரைனும் தங்களுக்கிடையே போர்க் கைதிகளை பரிமாற்றிக் கொண்டன.
Published on: October 20, 2024 at 4:14 pm
Russia Ukraine war | சுமார் 3 ஆண்டுகளாக உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில், ரஷ்யாவும், உக்ரைனும் தங்களுக்கிடையே 190 போர்க் கைதிகளை பரிமாற்றிக் கொண்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த உக்ரைன் போா்க் கைதிகள் 95 பேர்அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷிய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகள் மகிழ்ச்சியாக சொந்த நாட்டுக்கு திரும்பினர் . ஏற்கனவே ரஷியா – உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com