அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’ படத்தின் புதிய அப்டேட்

Retta Thala Movie Update | ரெட்ட தல திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Published on: October 19, 2024 at 9:11 pm

Retta Thala Movie Update | நடிகர் அருண் விஜய் தடம் படத்திற்கு பிறகு மீண்டும் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ரெட்ட தல’ . இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் ‘ரெட்ட தல’ படக்குழுவினருக்கு அருண் விஜய் அசைவ விருந்தளித்தார். இந்த நிலையில் இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள பதிவில், ‘ரெட்ட தல’ படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. எங்கள் அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி. பயணம் நம்பமுடியாததாக இருந்தது. ஆனால் இன்னும் சிறப்பாக வர இருக்கிறது. அடுத்து என்ன என்று காத்திருங்கள்! என்று பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க ஹாலிவுட் ஹீரோயின்ஸ் ஓரம்போ: சென்னைகாரி சமந்தா ஸ்டன்னிங் லுக்ஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com