Sathuragiri Temple | சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sathuragiri Temple | சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on: October 15, 2024 at 12:46 am
Sathuragiri Temple | பிரபலமான கோவில்களில் ஒன்றான சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ளது. கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையில், தற்போது தானிப்பாறை பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முன்னதாக, புரட்டாசி மாத பிரதோஷம் என்பதால் அக்டோபர் 15 முதல் 18ஆம் தேதி வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு… ஸ்பாட் புக்கிங்; உடனே செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com