Dubai | துபாயில் ஓ.வி. கல்வி மையத்தின் சார்பில் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Dubai | துபாயில் ஓ.வி. கல்வி மையத்தின் சார்பில் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Published on: October 14, 2024 at 4:55 pm
Updated on: October 14, 2024 at 6:12 pm
Dubai | துபாய் நகரில் தமிழக அரசின் தமிழ் விர்ச்சுவல் அக்காடமியின் அனுமதியுடன் ஓ.வி. கல்வி பயிற்சி மற்றும் குழந்தைகள் திறன் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பில் ஏடு தொடங்குதல் சிறப்பு நிகழ்ச்சி துபாய் ஹோர் அல் அன்ஸ் நூலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய தலைவர் கலை தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், அமீரக பிரமுகர் டாக்டர் ஆயிஷா பெல்ரிகாட் அல் பலாசி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். மாணவ, மாணவியர் அ’ என்ற எழுத்தை எழுதி ஏடு தொடங்குதல் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதையும் படிங்க : சூழ்ந்திருக்கும் போர் மேகம்; இஸ்ரேல் பிரதமரின் மனிதநேயம்: ரத்தன் டாட்டா-க்கு இரங்கல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com