Top Performing Mutual Fund Schemes | இந்தியன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளின் நிர்வாகத்தின் சொத்துக்கள் இரட்டிப்பாகி 2019-2020 ல் ரூ. 22.26 லட்சம் கோடியிலிருந்து ஆகஸ்ட் 2024-இல் ரூ. 66.7 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. சாதகமான சந்தை நிலைகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வலுவான நிதி வரவுகள் ஆகியவை இந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணங்களாக அமையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அடுத்த ஆண்டு பொருளாதாரம் மேலும் வலுபெற்று முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. லார்ஜ் கேப் ஃபண்டுகள் முதலீட்டாளர்களிடையே அதிக அளவில் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை விரும்பும் பெரும்பாலான முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளது.
தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் போன்ற உயர்நிலை வளர்ச்சி கொண்ட துறைகளில் மையமாகக் காணப்படுகின்றன. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் முக்கியமான மற்றும் பணத்தை பெருக்கும் கருவியாக மாற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது. டெயில்விண்ட் நிதி நிறுவனத்தில் கூட்டு மேலாண்மை இயக்குநர் விவேக் கோயல், முதலீடுகளை நிதியியல் மற்றும் சமூக பொறுப்புடன் செய்வது, நிறுவன வளர்ச்சிக்கு முக்கியமாகும் என்றார்.
மேலும், அவர் கூறுகையில், “கடந்த பத்து ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகளின் அபரிமித வளர்ச்சி, இந்திய சந்தையின் வலிமையும், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கிடைக்கக்கூடிய செல்வத்தை பெருக்கும் வாய்ப்புகளையும் காட்டுகிறது. நிப்போன் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு, 10 ஆண்டுகளுக்கு 23.5% வருமானம் மற்றும் மோட்டிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்டு 21.6% அளிக்கும் வருமானம் ஆகியவை, சந்தை நிலைகள் மாறுபடும் போதும், சிறிய மற்றும் மிட்கேப் முதலீடுகளில் முக்கியமான லாபங்களைப் பெறமுடியும் என்பதை காட்டுகின்றன.
இலக்குகளை அடைவதில் நிதி தேர்வு செய்வதன் முக்கியத்துவம் முக்கிய பங்காற்றுகிறது. டெய்ல்விண்ட் நிதி சேவைகளில், நிலையான மற்றும் செல்வத்தை பெருக்குவற்கான வலுவான நம்பிக்கையான மியூச்சுவல் ஃபண்டுகளை நாங்கள் ஆதரிக்கிறோம். நீண்ட கால முதலீட்டாளர்கள் அதிகப்படியான லாபம் பெற முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. என்றார்.
முன்னணி மியூச்சுவல் ஃபண்டுகள், 5 மற்றும் 10 ஆண்டு காலங்களில் சிறப்பான வருமானங்களை வழங்கியுள்ளன.
Fixed Deposit: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி, ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி, ஆக்சிஸ் வங்கி, மகாராஷ்டிரா வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளின்…
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டம் மக்களிடையே மிக பிரபலமாக உள்ள திட்டமாகும். இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் எனப்படும் மூத்தக் குடிமக்கள் முதலீடு செய்கின்றனர்….
SBI Fixed deposit scheme: நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.20 லட்சம் ஒன்டைம் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5…
Fixed Deposit interest rates: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், பெரும்பாலான வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.