டெல்லியில் ராகுல் காந்தியை துரை வைகோ எம்.பி. சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் ராகுல் காந்தியை துரை வைகோ எம்.பி. சந்தித்துப் பேசினார்.
Published on: October 9, 2024 at 9:29 pm
Durai Vaiko met Rahul Gandhi | டெல்லியில் ராகுல் காந்தியை துரை வைகோ எம்.பி. சந்தித்துப் பேசினார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் துரை வைகோ, “தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தனித்துவ கோட்பாடுகளான சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பற்ற தன்மை போன்றவை இந்தியா முழுவதும் பிரதிபலிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.
திராவிட இயக்க அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு இருப்பதால் தமிழர்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அதனால்தான் அங்கு மதசார்பின்மை கொள்கை வெற்றி பெற்றுள்ளது என்று திரு ராகுல் காந்தி அவர்கள் கூறிய போது மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மை, இந்து மதம் சார்ந்த கண்ணோட்டம், இந்தியாவின் ஆன்மீக கலாச்சாரத்தில் பல்வேறு வகையான தத்துவக் கோட்பாடுகள் உள்ளன.
ஆனால் பாஜக , ஆர் எஸ் எஸ் போன்றவை இந்துத்துவ சிந்தனை மட்டுமே இந்து மத அடையாளம் என்று கட்டமைக்க விரும்புகின்றன என்று ராகுல் காந்தி அவர்கள் சரளமாக உரையாடினார்.
மேலும் ஈழத் தமிழர்கள் பிரச்சனை, தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும் போக்குகள் குறித்தும் கருத்துக்களை கவலையுடன் பகிர்ந்து கொண்டார்.
கடந்த வாரம் இலங்கை கடற்படையினர் 37 தமிழக மீனவர்களை கைது செய்ததை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திரு ராகுல் காந்தி அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியதற்கு நன்றி தெரிவித்தேன்.
என் மகள் திருமண அழைப்பிதழை அவரிடம் கொடுத்ததும் மகிழ்ச்சிப் பொங்க எங்கள் குடும்பத்தை பற்றியும், மகன் ,மகளைப் பற்றியும் கேட்டறிந்தார்.
மணமகனைப் பற்றியும் விவரங்கள் கேட்டார்.
நீங்கள் மணவிழாவுக்கு வந்தால் எங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைவதை காட்டிலும் எங்கள் இயக்கத் தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ₹.3.65 லட்சம் கோடி சொத்து; சுயேச்சையாக போட்டி: வெற்றிப் பெற்றாரா சாவித்ரி ஜிண்டால்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com