Post Office Small Savings Scheme | இந்த போஸ்ட் ஆபிஸ் ஸ்கீமில் தினமும் ரூ.333 முதலீடு செய்தால் ரூ.17 லட்சம் ரிட்டன் பெறலாம்.
Post Office Small Savings Scheme | இந்த போஸ்ட் ஆபிஸ் ஸ்கீமில் தினமும் ரூ.333 முதலீடு செய்தால் ரூ.17 லட்சம் ரிட்டன் பெறலாம்.
Published on: October 9, 2024 at 5:51 pm
Post Office Small Savings Scheme | போஸ்ட் ஆபிஸில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று தொடர் வைப்புத்தொகை எனப்படும் ஆர்.டி திட்டம் ஆகும். இதில் மாதத்திற்கு ரூபாய் 100 முதல் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்துக்கு 6.8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும், இந்த பிரபலமான திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 17 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி திரட்டலாம்.
அது எப்படி என்று பார்க்கலாம்.
இந்தத் திட்டத்தில் தினமும் ரூ.333 ரூபாய் முதலீடு செய்தால், இந்தத் தொகை மாதத்திற்கு சுமார் 10,000 ரூபாயாகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.20 லட்சம் ரூபாய் சேமிப்பாகிறது. அந்த வகையில், ஐந்து வருட முதிர்வு காலத்தில், நீங்கள் ரூ. 5,99,400 டெபாசிட் செய்வீர்கள். இப்போது 6.8 சதவீத கூட்டு வட்டி விகிதத்தில் பார்த்தால் வட்டியாக ரூ..1,15,427 கிடைக்கும். அதாவது உங்கள் மொத்தத் தொகை. 7,14,827 ஆக உயரும்.
மேலும், முதிர்வு காலம் முடிந்த பிறகு, உங்கள் முதலீட்டை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இப்போது 10 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை ரூ. 12,00000 ஆகவும், அதற்கான வட்டி ரூ. 5,08,546 ஆகவும் இருக்கும். ஆக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, வட்டியைச் சேர்த்த பிறகு, உங்களுக்கு மொத்தம் ரூ.17,08,546 கிடைக்கும்.
இதையும் படிங்க செல்வ மகள் சேமிப்பு திட்டம்: ஒரு வங்கியில் இருந்து கணக்கை மற்றொரு பேங்கிற்கு மாற்றுவது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com