Kulasekarapattinam | குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் ஆய்வு நடத்தினார்.
குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு நடைபெறும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 03.10.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா வரும் 13.10.2024 அன்று காப்பு காப்பு தரித்தலுடன் திருவிழா நிறைவடைகிறது.
இத்திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டு நேற்று (அக்8, 2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கோவிலுக்கு செல்லும் வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்கள் உள்ள பகுதிகளில், அது குறித்த அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து இடங்களிலும் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க
Space Industry Zone : திருநெல்வேலி, தூத்துக்குடியில் விண்வெளித் துறை முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது….
TN Budget 2026 : மின் விநியோகத்தின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள 40,000 பழைய மின்மாற்றிகள் மாற்றப்படவுள்ளன….
Gold ring scheme: தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது….
Political Reshuffle : தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பார்க்கலாம்….
Cauvery Flow Towards Mettur : காவிரி நீர் தமிழ்நாடு நோக்கி பாய்ந்தோடி வருகிறது; இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது….
Boat Insurance : தருவைகுளம் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் சமீபத்தில் நடந்த ஐந்து படகு விபத்துகள், மீன்பிடிப் படகுகளுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் இல்லாதது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்