Indian Bank Jobs | இந்தியன் வங்கி உள்ளூர் வங்கி அதிகாரி(எல்.பி.ஓ) பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.
இந்தியன் வங்கி எல்.பி.ஓ தேர்வுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கான தேர்வு அக். 10 ஆம் தேதி நடக்கிறது.
ஹால் டிக்கெட்டை அதிகார்பூர்வ தளமான indianbank.in இல் பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் பதிவு எண் / ரோல் எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
- முதலில் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ தளமான indianbank.in-க்கு செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் “கரியர்” (Career) டேபைக் கிளிக் செய்யவும்
- இப்போது புதிதாக திறக்கப்பட்ட பக்கத்தில் “ஆன்லைன் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்” (Click here for downloading Call Letter for Online Exam) என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் பதிவு எண்/ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிடவும்
- உங்கள் இந்தியன் வங்கி LBO அட்மிட் கார்டு 2024 தோன்றும். இதைச் சரிபார்த்து பதிவிறக்கவும்
- தேர்வு நாளுக்கான ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
தேர்வு முறை
- எழுத்து/ஆன்லைன் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் மொத்தம் 155 கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
- தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தவறான பதில் அளிக்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண்ணில் 1/4 குறைக்கப்படும். பதிலளிக்காத கேள்விக்கு மதிப்பெண் கழிக்கப்படாது.
- எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்ட தேர்விற்கு தகுதி பெறுவார்கள்.
- காலியிடங்களை பொறுத்து மொத்த மதிப்பெண்ணில் எடுத்த கட்ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்பட்டு 100 மதிப்பெண் கொண்ட நேர்முகத் தேர்விற்கு கலந்துகொள்ள அழைக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க
AIBE XX Result 2025: அகில இந்திய பார் தேர்வு முடிவுகள் டிசம்பர் இறுதிக்குள் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது….
Global Honorary Doctorate Award Ceremony: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சார்பில் உலகளாவிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது….
IBPS Clerk Recruitment 2025: ஐ.பி.பி.எஸ் கிளார்க் தேர்வில் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன….
Paying tuition fees through UPI: பள்ளி மற்றும் கல்லூரி கல்வி கட்டணங்களைச் சமர்ப்பிப்பதற்காக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் யூ.பி.ஐ (UPI) கொண்டுவர வேண்டும் என…
Keir Starmer: இந்தியாவில் மேலும் இரண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழக வளாகங்களை அமைக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்