அபிஷேக் பச்சனுக்கு மாதந்தோறும் ரூ.18 லட்சம் வழங்கும் எஸ்.பி.ஐ: ஏன் தெரியுமா?

Abhishek Bachchan | அபிஷேக் பச்சனுக்கு எஸ்.பி.ஐ மாதந்தோறும் ரூ.18 லட்சம் வழங்கி வருகிறது.

Published on: October 6, 2024 at 8:00 am

Abhishek Bachchan | அமிதாப்-ஜெயா தம்பதியரின் மகன் அபிஷேக் பச்சன். இவர் குரு, தூம், பணடி அவுர் பப்லி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மேலும், படத் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். இதுமட்டுமின்றி பிசினஸ் மற்றும் விளையாட்டு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திவருகிறார்.

இவர், 2007ல் ஐஸ்வர்யா ராய்-ஐ திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் மாதந்தோறும் அபிஷேக் பச்சன் எஸ்.பிஐ வங்கியில் இருந்து ரூ.18 லட்சம் பெறுகிறார். இது ஏன் என்று பார்க்கலாம்.

ரூ.18 லட்சம் பெறுவது ஏன்?

அபிஷேக் பச்சனின் ஆடம்பரமான ஜூஹு பங்களாவை எஸ்.பி.ஐ வாடகைக்கு எடுத்துள்ளது. இந்தப் பங்களாவின் மதிப்பு ரூ.280 கோடி என்று கூறப்படுகிறது. இதன் குத்தகை 15 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கி அபிஷேக் பச்சனுக்கு வாடகையாக ரூ.18 லட்சம் வழங்குகிறது.
இதனால் அபிஷேக் பச்சன் குடும்பத்துக்கு கணிசமான பணம் வாடகை மூலமாக வந்து சேர்கிறது.

இது தொடர்பான அறிக்கையில், பாரத ஸ்டேட் வங்கி. அபிஷேக் பச்சனுக்கு தற்போது வங்கியில் இருந்து மாத வாடகையாக ₹18.9 லட்சம் அளிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. குத்தகையில் குறிப்பிட்ட காலகட்ட வாடகை உயர்வுக்கான ஏற்பாடுகள் உள்ளன, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாத வாடகை ₹23.6 லட்சமாக உயரும், மேலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ₹29.5 லட்சமாக அதிகரிக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

சர்வதேச படவிழாவில் தேர்வான ஹோம்பவுண்ட்.. இந்தியப் படத்துக்கு புதிய அங்கீகாரம் Best International Feature Film at Oscars 2026

சர்வதேச படவிழாவில் தேர்வான ஹோம்பவுண்ட்.. இந்தியப் படத்துக்கு புதிய அங்கீகாரம்

Best International Feature Film at Oscars 2026: இந்தியில் வெளியாகி நாடு முழுக்க கவனம் பெற்ற ஹோம்பவுண்ட் என்ற திரைப்படம் சர்வதேச படவிழாவில் தேர்வாகியுள்ளது….

ரன்வீர் சிங்கின் துரந்தர்.. பாக்ஸ் ஆபிஸில் எப்படி? Dhurandhar box office

ரன்வீர் சிங்கின் துரந்தர்.. பாக்ஸ் ஆபிஸில் எப்படி?

Dhurandhar box office : நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன….

ஒ.டி.டி தளத்தில் அக்ஷய் குமாரின், ஜாலி எல்.எல்.பி.. முழு விவரம்! Jolly LLB 3 OTT release date

ஒ.டி.டி தளத்தில் அக்ஷய் குமாரின், ஜாலி எல்.எல்.பி.. முழு விவரம்!

Jolly LLB 3 OTT release date: நடிகர் அக்ஷய் குமாரின் ஜாலி எல்.எல்.பி படம் ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ளது….

பிரபல பாடகருக்கு லதா மங்கேஷ்கர் விருது.. யார் இந்த சோனு நிகம்? National Lata Mangeshkar Award

பிரபல பாடகருக்கு லதா மங்கேஷ்கர் விருது.. யார் இந்த சோனு நிகம்?

National Lata Mangeshkar Award: பிரபல பின்னணிப் பாடகி சோனு நிகமுக்கு, லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது….

சைஃப் அலிகான் அறையில் தூங்க அனுமதிக்கப்படவில்லை.. சோஹா அலிகான்! Soha Ali Khan

சைஃப் அலிகான் அறையில் தூங்க அனுமதிக்கப்படவில்லை.. சோஹா அலிகான்!

Soha Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அறையில் தூங்க நான் அனுமதிக்கப்படவில்லை என்கிறார் அவரின் சகோதரி சோஹா அலிகான்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com