Pakistan Cricket Team | பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Pakistan Cricket Team | பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Published on: October 5, 2024 at 6:54 pm
Updated on: October 5, 2024 at 10:25 pm
Pakistan Cricket Team | பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து வெளியான தகவலில், “கடந்த 3 மாதங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கவில்லை.
இந்த ஆண்டு அணியில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கான ஒப்பந்த தேதியையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை அறிவிக்கவில்லை.
இதற்கு பின்னால் சம்பள பிரச்னைதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இது வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ந்துவருகின்றன. அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகினார். இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், குடும்பத்துடன் நேரத்தை செலவிட உள்ளேன்” எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com