Tasmac Bill | டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறைக்கான சோதனை முயற்சியாக ராணிப்பேட்டையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமக இது 7 டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தக் கடைகள், ஆற்காடு, திமிரி, வானம்பாடி, ரத்தினகிரி, ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி ஆகும். இந்த கடைகளில் மது வாங்க வந்தவர்களுக்கு பில்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “இது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் விலை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்ற சர்ச்சை முடிவுக்கு வரும். மேலும், மது பிரியர்களுக்கு எந்த ரகம் பிடித்துள்ளது; எது அதிகம் விற்பனையாகிறது என்ற தகவலும் கிடைக்கும்” என்றார்.
கடந்த காலங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை அமைச்சர் வரை சென்றது. தொடர்ந்து, இது தொடர்பாக அமைச்சர் விளக்கம் அளித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க
Train Theft: சென்னை பேசின்பிரிட்ஜ்–வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே பயணிகளின் செல்போன்களை திருடி வந்த இளைஞரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்….
WTL Conference: அண்ணாமலை தலைமையிலான ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் 2வது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுகிறது….
Shruti moves into new home : சென்னையில் புதிய வீட்டில் குடியேறியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன….
Vietnam Boat Tragedy: வியட்நாமில் 15 இந்தியர்கள் உயிரிழந்த படகு விபத்தில் உயிர் தப்பிய திண்டுக்கல்லைச் சேர்ந்த நிர்மல் குமார், “படகில் ஏறிய 3 நிமிடங்களிலேயே மிகப்பெரிய…
Rajendra Arlekar in Kashi Sangamam : தென்னிந்தியர்கள் வடமொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்