என்எல்சியில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!

NLC Graduate Trainee Recruitment 2026: என்எல்சியில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன; கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

Published on: November 28, 2026 at 6:21 pm

கடலூர், நவ.28, 2026: நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் (NLC) 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் (Graduate Executive Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெக்கானிக்கல் பிரிவில் 66, எலக்ட்ரிக்கல் பிரிவில் 44, சிவில் பிரிவில் 23, மைனிங் பிரிவில் 10 என மொத்தம் 143 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பொறியியல் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 2025-ஆம் ஆண்டு கேட் (GATE) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் குறைந்தது 50 சதவீதமும், இதர பிரிவினர் 60 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு 1.11.2026 நிலவரப்படி அதிகபட்ச வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1.60 லட்சம் வரை ஊதிய விகிதம் வழங்கப்படும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் என்எல்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nlcindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 14, 2026 ஆகும். விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இதர நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கூட்டுறவு சங்கங்கள் மூலமும் டாஸ்மாக் கடைகளை நடத்த அனுமதி.. தமிழக அரசு உத்தரவு!

என்எல்சியில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!
NLC Graduate Trainee Recruitment 2026

என்எல்சியில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com