தொகுதி மறுவரையறை மசோதாவைத் தோற்கடிக்க திமுக முன்வர வேண்டும்.. தொல். திருமாவளவன்

Delimitation Bill Opposition: “தொகுதி மறுவரையறை மசோதாவைத் தோற்கடிக்க திமுக மீண்டும் முன்வர வேண்டும்” என வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Published on: November 28, 2026 at 2:29 pm

கோவை, நவ.28, 2026: நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் தோற்கடிக்க திமுக முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாகக் கூறினார்.

ஏற்கெனவே இந்த மசோதாவைக் கொண்டுவர முயன்றபோது, அதை எதிர்த்து தோற்கடிப்பதில் திமுக முக்கியப் பங்காற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல், இந்த முறையும் திமுக முன்னின்று செயல்பட்டு மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தைக் கொண்டுவருவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டங்களைச் செயல்படுத்த பாஜகவுக்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்களவையின் தற்போதைய 543 உறுப்பினர்கள் எண்ணிக்கையை மாற்றமின்றித் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, சங் பரிவார் அமைப்புகளின் அரசியல் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார். தொகுதி மறுவரையறைக்கு எதிராகவும், மக்கள் தொகை அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தியும் சனிக்கிழமை செங்கல்பட்டில் நடைபெறும் மாநிலம் தழுவிய போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார்: தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com