மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் முதல் பாடல்.. ‘ஆச்சி ஆச்சி’ வெளியீடு!

Inji Vellam First Song Release: மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் முதல் பாடல் ‘ஆச்சி ஆச்சி’ வெளியாகியுள்ளது.

Published on: November 27, 2026 at 2:30 pm

சென்னை, நவ.27, 2026: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’. இப்படத்தின் முதல் பாடலான ‘ஆச்சி ஆச்சி’ பாடலை படக்குழுவினர் நவம்பர் 25-ம் தேதி வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். வைஷாலி சமந்த் மற்றும் ஷரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் வரிகளும் பாடலில் இடம்பெற்றுள்ளன.

பாடலுடன் வெளியிடப்பட்டுள்ள லிரிக்கல் வீடியோவில் அழகிய ஓவியங்கள் மூலம் காதல் ஜோடியின் வாழ்க்கைப் பயணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் கர்ப்பிணியாகக் காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் காதல் மற்றும் தாய்மைப் பயணத்தைப் பாடல் வெளிப்படுத்துகிறது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணி இணைந்துள்ள இப்படம், வரும் 2027 ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க : 5 மொழிகளில் வராஹி அம்மன்.. உருவாகும் பிரமாண்ட புராணக் கதை!

டிஸ்னி வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர்.. அடேங்கப்பா.. 24 மணி நேரத்தில் 56.3 கோடி பார்வைகளா!
Avengers Doomsday Trailer Record

டிஸ்னி வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர்.. அடேங்கப்பா.. 24

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com