கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம்: கவர்னர் அர்லேகரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் புகார்!

Udhayanidhi Stalin Governor Meeting: பெண் மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக கவர்னர் அர்லேகரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Published on: November 26, 2026 at 11:10 am

சென்னை, நவ.26, 2026: பெண் மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (நவம்பர் 25) தமிழக டி.ஜி.பி.யிடம் புகார் மனு அளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 26) கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அங்கு தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்துப் பேசினார்.

அப்போது, பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்தார்.

இதையும் படிங்க: பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்.. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு.. அடுத்து என்ன?

தேனியில் 3,000 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு.. பண்டைய வானியல் அறிவுக்கு ஆதாரம்!
Ancient Burial Sites in Theni

தேனியில் 3,000 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு.. பண்டைய வானியல் அறிவுக்கு ஆதாரம்!

பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்.. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு.. அடுத்து என்ன?
Arul Vignesh Obscene Message Case

பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்.. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு.. அடுத்து

தமிழகத்தில் ரூ.58,214 கோடி முதலீடு; 78 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து!
CM Vijay

தமிழகத்தில் ரூ.58,214 கோடி முதலீடு; 78 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. முதல்வர் விஜய் முன்னிலையில்

அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. 3 மாவட்டங்களில் 11 இடங்களில் ரெய்டு!
TNCSC Rice Scam

அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. 3 மாவட்டங்களில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com