தேனியில் 3,000 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு.. பண்டைய வானியல் அறிவுக்கு ஆதாரம்!

Ancient Burial Sites in Theni: தேனி மாவட்டம் வருசநாடு அருகே குதிரைமலை அடிவாரத்தில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான 50-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Published on: November 25, 2026 at 5:29 pm

தேனி, நவ.25, 2026: தேனி மாவட்டம் வருசநாடு அருகே குதிரைமலை அடிவாரத்தில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான 50-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அக்கால மக்களின் வானியல் அறிவு மற்றும் வாழ்வியல் முறைகள் குறித்து புதிய தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

துரைசாமிபுரம் அருகே புதுக்காடு பகுதியில் நடைபெற்ற கள ஆய்வின்போது, கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வம் இந்த ஈமச்சின்னங்களையும், சிறிய கற்கருவிகளையும் கண்டறிந்துள்ளார்.

இந்த ஈமச்சின்னங்கள் கிழக்கு – மேற்கு திசையைத் துல்லியமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. சில அமைப்புகள் சூரியன் உதிக்கும் திசையையும், மற்றவை சூரியன் மறையும் திசையையும் நோக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அக்கால மக்களுக்கு வானியல் தொடர்பான அறிவு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மூல வைகை ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில் பெருங்கற்கால மக்கள் குழுக்களாக வாழ்ந்து, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு வைகை ஆற்றின் தொடக்கப் பகுதியில் நிலவிய பண்டைய நாகரிகத்தின் தொன்மையை அறிய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்.. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு.. அடுத்து என்ன?

பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்.. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு.. அடுத்து என்ன?
Arul Vignesh Obscene Message Case

பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்.. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு.. அடுத்து

தமிழகத்தில் ரூ.58,214 கோடி முதலீடு; 78 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து!
CM Vijay

தமிழகத்தில் ரூ.58,214 கோடி முதலீடு; 78 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. முதல்வர் விஜய் முன்னிலையில்

அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. 3 மாவட்டங்களில் 11 இடங்களில் ரெய்டு!
TNCSC Rice Scam

அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. 3 மாவட்டங்களில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com