தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. நவ.28 வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு!

Rain Alert: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவ.28 வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Published on: November 25, 2026 at 3:18 pm

சென்னை, நவ.25, 2026: தமிழகத்தில் வரும் நவம்பர் 28ஆம் தேதி வரை அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான திருத்தப்பட்ட வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இன்று (நவம்பர் 25) நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 26ஆம் தேதி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களிலும், நவம்பர் 27ஆம் தேதி நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நவம்பர் 24 முதல் 28ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தில் ரூ.58,214 கோடி முதலீடு; 78 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து!

தமிழகத்தில் ரூ.58,214 கோடி முதலீடு; 78 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து!
CM Vijay

தமிழகத்தில் ரூ.58,214 கோடி முதலீடு; 78 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. முதல்வர் விஜய் முன்னிலையில்

அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. 3 மாவட்டங்களில் 11 இடங்களில் ரெய்டு!
TNCSC Rice Scam

அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. 3 மாவட்டங்களில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com