தமிழகத்தில் ரூ.58,214 கோடி முதலீடு; 78 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து!

CM Vijay: செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே நடைபெற்ற இரண்டாவது ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர் மாநாட்டில், முதலமைச்சர் விஜய் தலைமையில் 78 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

Published on: November 25, 2026 at 3:08 pm

சென்னை, நவ.25, 2026: செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே நடைபெற்ற இரண்டாவது ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர் மாநாட்டில், முதலமைச்சர் விஜய் தலைமையில் 78 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் தமிழகத்திற்கு ரூ.58,214 கோடி முதலீடு கிடைக்கவுள்ளது. இதன் வாயிலாக 65,786 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரூ.7,925 கோடி முதலீட்டில் 15 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் 19,965 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிறைவடைந்த ரூ.1,430 கோடி மதிப்பிலான 6 திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த ஒப்பந்தங்கள் வாகன உற்பத்தி, மின்னணுவியல், குறைக்கடத்திகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கப்பல் கட்டுமானம், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் கப்பல் கட்டுமானத் துறையில் சன்மார் குழுமம் ரூ.1,950 கோடியும், கிருஷ்ணகிரியில் டைட்டன் நிறுவனம் ரூ.1,500 கோடியும் முதலீடு செய்யவுள்ளன.

தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 200 நாட்களில், தற்போது கையெழுத்தான ஒப்பந்தங்களையும் சேர்த்து மொத்தம் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.73 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்தம் 1,98,557 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. 3 மாவட்டங்களில் 11 இடங்களில் ரெய்டு!

அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. 3 மாவட்டங்களில் 11 இடங்களில் ரெய்டு!
TNCSC Rice Scam

அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. 3 மாவட்டங்களில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com