உத்தரப் பிரதேச தேர்தல்.. காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.. 3 நாள்களில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு!

UP Election Seat Sharing Talks: உத்தரப் பிரதேச தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. 3 நாட்களில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: November 24, 2026 at 1:28 pm

லக்னோ, நவ.24, 2026: 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி இல்லத்தில் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவார்த்தை சுமார் 20 நிமிடங்களில் நிறைவடைந்தது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி, உத்தரப் பிரதேசத்தில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய திருத்தப்பட்ட பட்டியலை சமாஜ்வாடி கட்சியிடம் வழங்கியுள்ளது. முன்னதாக 181 தொகுதிகளைக் கேட்டிருந்த காங்கிரஸ், தற்போது தனது கோரிக்கையை சுமார் 130 தொகுதிகளாகக் குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமேதி, ரேபரேலி உள்ளிட்ட காங்கிரஸின் பாரம்பரிய செல்வாக்கு மிக்க தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சமாஜ்வாடி கட்சியின் முக்கியக் கோட்டைகளான எட்டாவா, மெயின்புரி தொகுதிகளை காங்கிரஸ் தனது பட்டியலில் சேர்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் அளித்த பட்டியலை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிடம் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும், அடுத்தகட்ட ஆலோசனை நவம்பர் 24-ம் தேதி நடைபெறும் என்றும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் 2 முதல் 3 நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என இரு கட்சிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : கர்நாடகாவில் பரபரப்பு.. YS ராஜசேகர ரெட்டி மகள் தடுத்து நிறுத்தம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com