கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத் தலைப்புக்கு எதிர்ப்பு.. டிசம்பர் 7-ல் சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம்.. கிருஷ்ணசாமி அறிவிப்பு

Sandiyar Title Controversy: கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, டிசம்பர் 7-ல் சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

Published on: November 24, 2026 at 12:25 pm

சென்னை, நவ.24, 2026: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் தலைப்பை மாற்ற வலியுறுத்தி வரும் டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் பிரமாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, சண்டியர் என்ற வார்த்தை ரவுடித்தனம், அட்டூழியம் போன்ற எதிர்மறையான அர்த்தங்களைக் கொண்டிருப்பதாகக் கூறினார். சினிமா சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், இதுபோன்ற தலைப்புகள் தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தூண்டக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் தனது படத்திற்கு சண்டியர் எனப் பெயரிட்டபோதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், அப்போது அந்தப் படத்தின் பெயர் ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டு வெளியானதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். தற்போதும் படத்தின் தலைப்பை மாற்றக்கோரி தமிழக அமைச்சர் ராஜமோகன் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் மனு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து சாஸ்திரி பவன் வரை பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், தொடர்ந்து மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்திடம் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி மனு அளிக்கப்படும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உலகளவில் ரூ.1,616 கோடியைக் கடந்த ‘ராமாயணா’ திரைப்படம்.. வசூலில் புதிய சாதனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com