நெல்லையில் பரபரப்பு.. திரிஷா பெயரில் அரசியல் அமைப்பு தொடக்கம்!

Trisha Political Entry Buzz: நடிகை திரிஷா பெயரில் திருநெல்வேலியில் புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில், அரசியலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Published on: November 24, 2026 at 12:11 pm

திருநெல்வேலி, நவ.24, 2026: நடிகை திரிஷாவின் பெயரில் திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. தச்சநல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜகோபால் இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த இயக்கத்தின் லோகோவில் நடிகை திரிஷாவின் புகைப்படத்துடன், ‘பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போன்ற ஆளுமை கொண்டவர் திரிஷா என்றும், அவரை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகப் பார்ப்பதாகவும் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகை திரிஷா திரைத்துறையைத் தாண்டி பொதுவாழ்விலும் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே மதுரையில் திரிஷா அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், தற்போது அவரது பெயரில் புதிய பேரவை தொடங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த அமைப்பைத் தொடங்குவதற்கு நடிகை திரிஷாவிடம் முன் அனுமதி பெறவில்லை என்றும், இதுகுறித்து திரிஷா தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பெண் ஐஏஎஸ் அதிகாரி புகார் அளிக்கவில்லை.. சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com