Woman IAS Officer Complaint Case: பெண் ஐஏஎஸ் அதிகாரி புகார் அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Woman IAS Officer Complaint Case: பெண் ஐஏஎஸ் அதிகாரி புகார் அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Published on: November 24, 2026 at 11:55 am
சென்னை, நவ.24, 2026: கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் மீது பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பியதாகவும், அவரிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகவும் எழுந்த புகார்கள் தொடர்பாக, அந்த அதிகாரி எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஆர்.திருச்சுளி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்து, நியாயமான விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன், சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமைச் செயலரிடமோ அல்லது வேறு எந்த அதிகாரியிடமோ புகார் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, புகாருக்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் செய்திகளின் அடிப்படையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டார்.
அதேநேரத்தில், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அது வருத்தமளிக்கக்கூடியது எனக் குறிப்பிட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் தலைமைச் செயலரிடமும் நேரடியாக விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : மீண்டும் கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்.. ரூ.5,000 நிவாரணம் வழங்க கோரிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com