Rishabh Pant Creates New Record : நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
Rishabh Pant Creates New Record : நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.

Published on: November 23, 2026 at 3:54 pm
வெலிங்டன், நவ.23, 2026: நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு SENA நாடுகளிலும் டெஸ்ட் சதம் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
போட்டியின் நான்காவது நாளில் 135 பந்துகளில் தனது 9-வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்த பண்ட், 128 ரன்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் 10 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் இடம்பெற்றிருந்தன. உலக அளவில் இந்தச் சாதனையைப் படைத்த மூன்றாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் நான்கு SENA நாடுகளிலும் டெஸ்ட் சதம் அடித்த விக்கெட் கீப்பர்களாக இருந்தனர். பண்டின் 9 டெஸ்ட் சதங்களில் 7 சதங்கள் SENA நாடுகளில் பதிவாகியுள்ளன. விக்கெட் கீப்பர்களில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் (17), ஆண்டி பிளவர் (12) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பண்ட் உள்ளார்.
மேலும், இந்தப் போட்டியில் 6 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது மொத்த சிக்ஸர் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 107 சிக்ஸர்கள் அடித்திருந்த நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லத்தை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 138 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : விவசாய குடும்பம் டூ ரூ.85 கோடி வருமானம்.. முகமது ஷமி சாதித்தது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com