விவசாய குடும்பம் டூ ரூ.85 கோடி வருமானம்.. முகமது ஷமி சாதித்தது எப்படி?

Mohammed Shami Net Worth: விவசாயக் குடும்பத்தில் பிறந்து ரூ.85 கோடி வருமானம் ஈட்டிய முகமது ஷமி குறித்து பார்க்கலாம்.

Published on: November 23, 2026 at 1:49 pm

புதுடெல்லி, நவ.23, 2026: உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது கடின உழைப்பால் கிரிக்கெட்டில் உயர்ந்து ரூ.85 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். 13 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் ஐபிஎல் ஒப்பந்தங்கள் மற்றும் பிசிசிஐ ஊதியம் மூலம் இந்தத் தொகையைப் பெற்றுள்ளார்.

ஷமியின் தந்தை தௌசிப் அலி, மகனின் கிரிக்கெட் கனவை நனவாக்குவதற்காகத் தனது நிலத்தின் ஒரு பகுதியை விற்று, அவரை கொல்கத்தாவுக்கு ரயிலில் அனுப்பினார். அங்கு பயிற்சி பெற்று உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஷமி, 2010-11-ம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டியிலும், அதே ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

ஐபிஎல் போட்டிகளில் 2014-ம் ஆண்டு டெல்லி அணிக்காக ரூ.4.25 கோடிக்கு ஒப்பந்தமான அவர், பின்னர் பஞ்சாப், குஜராத், ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினார். 2026-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ரூ.10 கோடிக்கு ஒப்பந்தமானார். 2018 முதல் பிசிசிஐ ஒப்பந்தத்தின் மூலமும் கணிசமான வருமானம் பெற்றுள்ளார். 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஐபிஎல் மற்றும் பிசிசிஐ ஒப்பந்தங்கள் மூலம் மட்டும் ஷமி சுமார் ரூ.85 கோடி ஈட்டியுள்ளதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் கிடைத்த வருமானம் இதில் சேர்க்கப்படவில்லை. தனியாக எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யாத ஷமி, அம்ரோஹாவில் பயிற்சிக் களங்களுடன் கூடிய பண்ணை வீட்டை அமைத்துள்ளார். அங்கு உள்ளூர் இளம் வீரர்களுக்கும் இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறார்.

இதையும் படிங்க : உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷுக்கு கடும் சவால் கொடுக்கத் தயாராகும் சிந்தாரோவ்!

‘சாண்ட்பேப்பர்கேட்’ விவகாரம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.. மேத்யூ ஹைடன்!
Sandpapergate Controversy

‘சாண்ட்பேப்பர்கேட்’ விவகாரம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.. மேத்யூ ஹைடன்!

TIME100 பட்டியலில் 9 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள்.. வைபவ், ஹர்மன்பிரீத், லவ்லினா உள்ளிட்டோருக்கு அங்கீகாரம்!
TIME100 Indian Sports Stars

TIME100 பட்டியலில் 9 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள்.. வைபவ், ஹர்மன்பிரீத், லவ்லினா உள்ளிட்டோருக்கு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com