குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 9 அடி முதலை: தாக்குதலில் ஒருவர் படுகாயம்!

Crocodile Attack: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சுமார் 9 அடி நீளமுள்ள முதலை தாக்கியதில் ராஜேந்திரன் என்பவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Published on: November 22, 2026 at 1:29 pm

கடலூர், நவ.22, 2026: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கோப்பாடி கிராமத்தில் வாய்க்காலில் இருந்து சுமார் 9 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று இன்று அதிகாலை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. ராஜேந்திரன் என்பவரது வீட்டின் படிக்கட்டின் கீழே அந்த முதலை பதுங்கியிருந்தது.

தெருநாய்களின் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த ராஜேந்திரனை, அங்கு பதுங்கியிருந்த முதலை திடீரெனத் தாக்கிக் கடித்தது. இதனால் அவர் அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், முதலையிடம் சிக்கியிருந்த ராஜேந்திரனை மீட்டனர்.

பின்னர் படுகாயமடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் முதலையை லாவகமாகப் பிடித்து ஏரியில் கொண்டு சென்று விட்டனர்.

இதையும் படிங்க: ஆட்டோ டிரைவர் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு.. பஞ்சலிங்க புரத்தில் பரபரப்பு

வாடும் சம்பா பயிர்கள்: காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்
Cauvery Delta Drought Demand

வாடும் சம்பா பயிர்கள்: காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்..

“காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள்?” – தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
Cauvery Water Dispute Hearing

“காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள்?” – தமிழக அரசுக்கு உச்ச

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com