டாவூத் இப்ராஹிம் கூட்டாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை.. உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு!

Naseem Turani Encounter Death: டாவூத் இப்ராஹிம் கூட்டாளி நசீம் துரானி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

Published on: November 20, 2026 at 1:58 pm

லக்னோ, நவ.20, 2026: நிழல் உலக தாதா டாவூத் இப்ராஹிமின் டி-கம்பெனி அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நசீம் துரானி, உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். டெல்லி போலீசாரும், நொய்டா சிறப்புப் படையினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

டெல்லியில் இரண்டு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நசீம் துரானி மீது ரூ.50 ஆயிரம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் 16-ம் தேதி, டெல்லி சட்டத்துறை அமைச்சர் கபில் மிஸ்ராவின் அலுவலகம் அருகே சமீர் (26) என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

புலந்த்ஷாஹரில் நசீம் துரானியை போலீசார் சுற்றிவளைத்தபோது, அவர் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதையடுத்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். அவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், நசீம் துரானி மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜனை கொலை செய்யும் திட்டத்திலும் அவருக்குத் தொடர்பு இருந்ததாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : திருமண உறவில் பாலியல் வன்கொடுமை.. டிசம்பரில் இறுதி விசாரணை.. உச்ச நீதிமன்றம்!

நக்சல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பழங்குடியினர்; வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.. பிரதமர் மோடி
Naxal Violence Impact

நக்சல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பழங்குடியினர்; வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.. பிரதமர் மோடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com