Rajinikanth Grandson Photos Viral: பேரன் யாத்ராவுடன் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்த ரஜினிகாந்த் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Rajinikanth Grandson Photos Viral: பேரன் யாத்ராவுடன் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்த ரஜினிகாந்த் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Published on: November 20, 2026 at 11:50 am
சென்னை, நவ.20, 2026: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தில் ரஜினிகாந்த் பிரவுன் நிற டி-ஷர்ட், கருப்பு நிற பேன்ட் மற்றும் தொப்பி அணிந்துள்ளார். அவரது பேரன் யாத்ரா வெள்ளை நிற உடையில் தாத்தாவுடன் இணைந்து நடந்து செல்லும் காட்சி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகன்தான் யாத்ரா. இவர்களுக்கு லிங்கா ராஜா என்ற மற்றொரு மகனும் உள்ளார். தாத்தா மற்றும் பேரன் இணைந்துள்ள இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் – காவ்யா மாறன் திருமணத்தில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட புகைப்படங்களையும் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க : மகள் ஐஸ்வர்யா மீது அவதூறு தகவல்கள்.. நடிகர் அர்ஜுன் போலீசில் புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com