Arjun Police Complaint: மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு தகவல்கள் வெளியான நிலையில் நடிகர் அர்ஜுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Arjun Police Complaint: மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு தகவல்கள் வெளியான நிலையில் நடிகர் அர்ஜுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Published on: November 20, 2026 at 11:32 am
சென்னை, நவ.20, 2026: நடிகர் அர்ஜுனின் மூத்த மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா குறித்து சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாக அர்ஜுன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்படி புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை ஐஸ்வர்யா கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அண்மையில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் நடைபெற்றபோது, அதில் உமாபதி பங்கேற்காதது குறித்து இணையத்தில் பல்வேறு வதந்திகள் பரவின. இதையடுத்து ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை குறித்து சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகின.
குறிப்பாக, ஐஸ்வர்யா குறித்து தனிப்பட்ட முறையிலும் அவதூறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்த அர்ஜுன், எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்களைப் பரப்புவது பொறுப்பற்ற செயல் என்றும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மகளின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அர்ஜுன், ஒரு தந்தையாக மகளின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கத் துணை நிற்பேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தனது மகளைப் பற்றியது மட்டுமல்ல; ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் பாதுகாப்பது தொடர்பானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : நகைச்சுவை, ஆக்ஷன், ஃபேண்டஸி.. விமல் நடிக்கும் புதிய படம்.. நவோரியா வெளியீடு எப்போது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com