Cyclone Akvan : அக்வான் புயல் தீவிரமடைகிறது; நவ.20 ஆந்திர கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cyclone Akvan : அக்வான் புயல் தீவிரமடைகிறது; நவ.20 ஆந்திர கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: November 18, 2026 at 11:27 am
சென்னை, நவ.18, 2026: வங்கக்கடலில் நிலவும் அக்வான் (Akvan) புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நவம்பர் 17 அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. சென்னைக்கு கிழக்கே 610 கி.மீ. தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 660 கி.மீ. தொலைவிலும் புயல் நிலை கொண்டிருந்தது.
இந்தப் புயல் நவம்பர் 17 மாலைக்குள் தீவிர புயலாகவும், நவம்பர் 19 காலை அதி தீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து நகரும் புயல் நவம்பர் 20 நண்பகல் நெல்லூர் – துனி இடையே ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரையை ஒட்டி கரையை கடக்கக்கூடும்.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே 145 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் நவம்பர் 18ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 18 முதல் 20 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 18 வரையும், தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 20 வரையும், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளிலும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் 2–3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தவறு செய்யும் தவெக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை இல்லை.. அதிமுக குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com