சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்துக.. உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Nadu Stray Cattle Control: தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: November 18, 2026 at 11:11 am

சென்னை, நவ.18, 2026: சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க, மாடுகளின் உரிமையாளர்கள் உரிமம் பெறவும், மாடுகளுக்கு அடையாளக் குறியீடு (Tag) பொருத்தவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவேற்காட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் கேமேஷ் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் விபத்துகளை ஏற்படுத்துவதுடன், பாதசாரிகளைத் தாக்குவது, கடைகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவது போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக மனுதாரர் தெரிவித்திருந்தார்.

மாடுகளின் உரிமையாளர்கள் உரிய உரிமம் பெறுவதை உறுதி செய்யவும், மாட்டுத் தொழுவங்களில் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மையை ஆய்வு செய்யவும், மாடுகளைக் கட்டி வைப்பதுடன் அடையாளக் குறியீடு பொருத்தவும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சாலைகளில் மாடுகளைத் திரியவிடும் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் என தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான சுற்றறிக்கைகளை 4 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் காவல்துறை தலைவருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : சப்-இன்ஸ்பெக்டர் தாயிடம் 15 பவுன் நகை பறிப்பு; பி.எச்.டி. மாணவர் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com