R. Vaishali Chess Victory: டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் போட்டியின் ஃபாஸ்ட் கிளாசிக் பிரிவு கடைசி குரூப் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.வைஷாலியிடம் அர்ஜுன் எரிகைசி தோல்வியடைந்தார்.
R. Vaishali Chess Victory: டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் போட்டியின் ஃபாஸ்ட் கிளாசிக் பிரிவு கடைசி குரூப் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.வைஷாலியிடம் அர்ஜுன் எரிகைசி தோல்வியடைந்தார்.

Published on: November 17, 2026 at 12:20 pm
புதுடெல்லி, நவ.17, 2026: டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் போட்டியின் ஃபாஸ்ட் கிளாசிக் பிரிவு கடைசி குரூப் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.வைஷாலியிடம் அர்ஜுன் எரிகைசி தோல்வியடைந்தார். இதனால் சாம்பியன்ஷிப் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அவர் இழந்தார்.
முன்னதாக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வைஷாலியை வீழ்த்திய எரிகைசி, தகுதி பெறும் வாய்ப்பில் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால், இரண்டாவது ஆட்டத்தில் வைஷாலி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால் குரூப் டி பிரிவில் எரிகைசி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
மற்றொரு இந்திய வீரரான ஆர்.பிரக்ஞானந்தா, வியட்நாமின் லீம் லீயுடன் விளையாடிய இரு ஆட்டங்களையும் டிரா செய்தார். இதனால் அவர் குரூப் பி பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் எரிகைசி, வைஷாலி, பிரக்ஞானந்தா என மூன்று இந்தியர்களும் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டியிலிருந்து வெளியேறினர்.
இதற்கிடையே, பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஜா, அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மற்றும் பிரான்ஸின் மேக்சிம் வாஷியே-லாக்ராவ் ஆகியோர் சாம்பியன்ஷிப் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனும் குழுநிலையில் ஒரு வெற்றியைக்கூடப் பெறாமல் அடுத்த கட்ட சாம்பியன்ஷிப் போட்டி வாய்ப்பை இழந்தார்.
இதையும் படிங்க : 2027 உலகக்கோப்பையில் ரோஹித்துக்கு இடமா? தேர்வுக்குழுத் தலைவர் பிரக்யான் ஓஜாவுக்கு சவால்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com