ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இளம் கேப்டன்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை!

Vaibhav Suryavanshi: ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இளம் கேப்டன் என்ற புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

Published on: November 15, 2026 at 2:47 pm

புதுடெல்லி, நவ.15, 2026: இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் கேப்டனாகப் பொறுப்பேற்று புதிய சாதனை படைத்துள்ளார். 15 வயது 232 நாட்களான அவர், சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் பீகார் அணியின் கேப்டனாகக் களமிறங்கினார்.

இந்தூரில் நடைபெற்ற சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியை அவர் வழிநடத்தினார். இதற்கு முன்பு குரோஷியா அணியின் சாக் வுகுசிக், 17 வயது 311 நாட்களில் கேப்டனாகப் பொறுப்பேற்றதே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பீகார் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டனாக அறிமுகமான சூர்யவன்ஷி 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும், அவரது கேப்டன் பொறுப்பு கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கெனவே டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடி பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், தற்போது கேப்டனாகவும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதையும் படிங்க : பாகிஸ்தானை வீழ்த்தி U-19 ஆசியக் கோப்பையை வென்ற இந்தியா.. திக் திக் நிமிடங்கள்!

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!
IPL 2027 Player Trade

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை

காலணி கூட இல்லாமல் மும்பைக்கு வந்தவர்… இன்று ரூ.209 கோடி சொத்து மதிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானின் வெற்றிப் பயணம்!
Zaheer Khan's Business Journey

காலணி கூட இல்லாமல் மும்பைக்கு வந்தவர்… இன்று ரூ.209 கோடி சொத்து மதிப்பு..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com