டிசம்பரில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர வாய்ப்பு.. எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை!

Repo Rate Hike Prediction: டிசம்பரில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர வாய்ப்பு இருப்பதாக, எஸ்.பி.ஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: November 15, 2026 at 2:32 pm

மும்பை, நவ.15, 2026: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வரும் டிசம்பர் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகளுக்குப் பதிலாக 25 அடிப்படைப் புள்ளிகள் மட்டுமே உயர்த்த வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. முன்னதாக 50 புள்ளிகள் உயர்த்தப்படலாம் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த மதிப்பீடு மாற்றப்பட்டுள்ளது.

எஸ்பிஐ ரிசர்ச் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பணவீக்கம், இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான அழுத்தங்கள் ஓரளவு குறைந்து வருவது இந்த மாற்றத்துக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், நாட்டின் சில்லறைப் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 6.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச பணவீக்கக் கட்டுப்பாட்டு வரம்பான 6 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. நவம்பர் மாதத்திலும் பணவீக்கம் அதிகமாக இருந்து, அதன்பிறகு படிப்படியாகக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், டிசம்பர் மாதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு, ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதத்தை எட்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலத்தில் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக இருக்க 50 சதவீத வாய்ப்பும், 5.75 சதவீதமாக இருக்க 50 சதவீத வாய்ப்பும் உள்ளதாக எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தங்கம் விலை அதிரடி சரிவு.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 குறைந்தது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com